• Nov 13 2024

500 கோடிக்கு அதிபதியான தனுஷ்.. ஜப்பான் திருமணத்தில் நடந்த ரகசிய டீல் இதுதானா?

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக காணப்படும் நெப்போலியன் தனது மகனுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தார். இவருடைய மூத்த மகன் தனுஷுக்கும் திருநெல்வேலியை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் ஜப்பானில் பிரம்மாண்டமாக திருமணம்  நடைபெற்றது.

தனுஷ் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதனால் பல விமர்சனங்கள் எழுந்தது. மேலும் அவரால்  இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது. நெப்போலியன் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கின்றார் என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

எனினும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது மகனின் கடமையை சிறப்பாக செய்து முடித்துள்ளார் நெப்போலியன். மேலும் தனது மருமகள்தான் தங்கள் குலசாமி என மிகவும் எமோஷனலாக நெப்போலியன் பேசியதும் இணையத்தில் வைரலானது.

d_i_a"

இந்த நிலையில், தனுஷின் திருமணம் தொடர்பில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், நெப்போலியன் தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஐடி கம்பெனி, பண்ணை வீடு என அங்கேயே செட்டிலானார்.

தனக்குப் பிறகு மகனை யார் கவனிப்பார் என்ற கவலை வந்தது. அவரை கவனிக்க ஒரு தாதி தேவை ஆனால் அவர் நன்றாக கவனிப்பார் என்று சொல்ல முடியாது.

தற்போது நெப்போலியனுக்கு ஆயிரம் கோடியில் சொத்து இருக்கின்றதாம். அதில் தனுஷ் மற்றும் அவருடைய சகோதரருக்கு சொத்தை சரியாக பிரித்தால் கூட 500 கோடி ரூபாய் சொத்து வரும். இதனால் அவரை பராமரிக்கும் தாதி  எதை வேண்டுமானாலும் செய்வார் என்ற பயம் நெப்போலியனுக்கு உள்ளது. 


இந்த காரணத்தினால் தாதியை மனைவியாக்க நினைத்தார். அவருக்குத்தான் அந்த சொத்து வரப்போகின்றது. இதனால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் திருமணம் நடந்தது.


இந்த திருமணத்தை அக்ஷயா மற்றும் அவருடைய பெற்றோர் என அனைவர் உடைய மனப்பூர்வமான சம்மதத்துடன் தான் நடந்தது. அக்ஷயா தனது இளமை, ஆயுள், அறிவு, ஆசை என அத்தனையுமே தனுசுக்காக அர்ப்பணித்துள்ளார்.

நெப்போலியன் அமெரிக்கா போனதே தனுஷ்காக தான். அவர் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும் என்று தான் ஜப்பானில் வியக்கும் அளவிற்கு திருமணத்தை நடத்தினார். இவர்களுடைய திருமணத்தை அமெரிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. 

அதாவது அமெரிக்காவில் திருமணம் செய்யும் இரண்டு பேரும் இல்லற வாழ்க்கைக்கு ஈடுபட தகுதியானவர்களாக இருக்க வேண்டும். இந்த காரணத்தினாலே ஜப்பானில் திருமணம் நடைபெற்றது.

ஜப்பானில் இப்படியான சட்டம் எதுவுமில்லை. யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். மேலும் அமெரிக்கா ஜப்பான் நேச நாடுகள் என்ற காரணத்தினால் ஜப்பானில் நடந்த திருமணத்தை அமெரிக்கா அங்கீகரிக்கும் என்ற காரணத்தினால் தான் ஜப்பானில் இந்த திருமணம் நடைபெற்றது என அவர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement