• Dec 07 2024

பாக்கியா மகனுக்கு yellow கார்டு உறுதியா? அதிரடி முடிவில் விஜய் சேதுபதி

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு பல அதிர்ச்சிகரமான சம்பவங்களும் சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கு பற்றிய போட்டியாளர்களுள் விஜே விஷால் ஒருவராக காணப்படுகின்றார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் எழில் என்ற கேரக்டரில் நடித்தார்.

இதுவரைக்கும் விஜே விஷால் பல இடங்களில் கலகலப்பாக நிகழ்ச்சியை நகர்த்தி வந்தார். அடிக்கடி டான்ஸ் ஆடுவது, பாட்டு பாடுவது கிண்டல் செய்வது என்று இயல்பாகவே காணப்பட்டார். ஆனால் அவர் கடந்த வாரத்தில் சௌந்தர்யாவிடம் நடந்து கொண்ட விதம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதை தொடர்ந்து ஆண் போட்டியாளர்களிடம் சௌந்தர்யாவை பற்றி தவறாக புறம் பேசி இருந்தார். இவ்வாறு சௌந்தர்யா மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் விஷால். மேலும் சௌந்தர்யா என்னை எப்போதும் உரசி கொண்டுள்ளார். தீபக் அண்ணா முட்டியில் கைவைத்து முகத்துக்கு முகம் பக்கத்தில் வைத்துக் கொண்டு நிற்கின்றார். இதை பார்க்கிறதுக்கே ஒரு மாதிரி இருக்குது என்று பேசினார்.

d_i_a

இதற்கு விஷால் சௌந்தர்யாவிடம் நேராகவே சென்று இப்படி தொட்டு பேசுவது பிடிக்கவில்லை என்று சொல்லி இருக்கலாம் ஆனால் அதை விட்டு சௌந்தர்யா மீது பல குற்றச்சாட்டுகளை அவதூறுகளை பரப்பி வருகின்றார்.


எனினும் சௌந்தர்யா தனியாக நின்றால் அவர் பக்கத்தில் போல் இடிப்பது போல் நிற்கிறது, சௌந்தர்யா தனியாக டான்ஸ் ஆடினாலும் அவருடன் சேர்ந்து ஆடுவது, சௌந்தர்யா முகத்துக்கு பக்கத்தில் போய் முகத்தை பார்ப்பது போன்ற காரியங்களை  விஷால் செய்கின்றார்.

இந்த நிலையில், விஜய் சேதுபதி  தொகுத்து  வழங்கும் இன்றைய நாளில் விஜே விஷாலுக்கு கண்டிப்பாக ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். விஷாலுக்கு பனிஷ்மென்ட் கொடுத்தால் தான் சரி என இணையத்தில் வைரலாகி வருகின்றமை  குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement