• Jan 19 2025

வெளுத்தது ரோகிணியின் சாயம்.. கடும் கோபத்தில் விஜயா! மீனா போட்ட பிளான் சக்ஸஸ்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், வட்டிக்காரர் வந்து மீனாவின் பூ கடையை நோட்டமிட, அதைப்பார்த்து விஜயா, யார் நீ? ஏன் இங்கையே நோட்டமிடுற என கேட்க, இது என் வீடு என சொல்கிறார். 

அதன்பின் அங்கு மீனா வர, அவர் காசு கொடுக்கிறார். அதை பார்த்து விஜயா என் பெயரை சொல்லி கடன் வாங்குறியா இல்ல அம்மாவுக்கு கொடுக்கிறீயா என கேட்க, கூடிய சீக்கிரம் உங்களுக்கு தெரிய வரும் என சொல்லி செல்கிறார்.

மறுபக்கம் ரோகிணியின் பாலருக்கு மனோஜ் செல்ல, அங்கு விஜயா பெயரில் பாலர் இல்லை என்பதை பார்க்கிறார். அதை பற்றி ரோகினியிடம் கேட்க, அதை ஒரு பேன்சி கம்பெனியிடம் கொடுத்ததாகவும் அதற்காக தான் பெயரை மாற்றியதாகவும்  அதன் மூலம் நல்ல காசு உழைக்கலாம் என்றும் மனோஜை சமாளிக்கிறார். மனோஜும் அதை நம்பி விட்டு வீட்டில் சொல்கிறேன் என செல்கிறார்.

இதை அடுத்து மனோஜ் வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை எல்லாரையும் அழைத்து சொல்ல, விஜயாவின் முகம் கோவத்தில் கொந்தளித்தது. அந்த நேரத்தில் ரோகினியும் அங்கு வந்து நான் உங்களுக்கு சப்ரைஸ் ஆக சொல்லலாம் என்று இருந்தேன், இதன் மூலம் கிடைக்கிற பணத்துல இன்னொரு பிரான்ச் ஓபன் பண்ணி அதுக்கு உங்க பேர் வைப்பம் என்று  யோசித்து இருந்தேன் என சொல்லி சமாளிக்கிறார்.


அதற்கு விஜயா கோபத்தில் இருந்தாலும், எல்லார் முன்னிலையும் ஒன்றும் பேச இயலாது என எனக்கு உன்ன பத்தி தெரியும்மா, நீ எது செய்தாலும் சரியா தான் இருக்கும் என மழுப்பி ரூமுக்கு செல்கிறார்.

இடையில் முத்து, அப்போ விஜயா பேர்ல பாலர் இல்லையா? பூக்கடை மட்டும் தான் இருக்கா அப்படி என்று கிண்டல் அடிக்கிறார். 

மறுபக்கம் முத்துவுக்கு கார் வாங்குவதற்காக செல்வத்துடன் சென்ற மீனா அங்கு தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து முதலில் காரை வாங்கிக் கொள்கிறார். அதன் பின்பு அந்த காரை ஓட்டி பார்ப்பதற்கு முத்துவை எப்படியாவது அழைத்து வருமாறு செல்வத்திடம் கூறுகிறார்.

இன்னொரு பக்கம் விஜயா ரூமுக்குள் கோபத்தில் இருக்க, அங்கு வந்த ரோகிணி என் மேல ஏதும் வருத்தமா இருக்கீங்களா என்று கேட்க, நான் உன் மேல செம கோவத்துல இருக்கேன், அந்த பாலர் எப்படி ஆரம்பிச்சது என்று மறந்துட்டியா?  எங்க வீட்டு பத்திரத்தை வைத்து தான் உனக்கு அது ஆரம்பிச்சேன், என் பெயரை மாத்தும்போது என்னிடம் கேட்டிருக்கணும் தானே. இந்த பாலர் ஓபன் பண்ண முதல் நீ வீடு வீடா போய் மசாஜ் பண்ணிட்டு இருந்தா என கண்டபடி திட்டுகிறார். அதற்கு ரோகிணி ஒன்றும் பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement