• Jan 18 2025

சன் டிவியில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஹீரோயின்ஸ்.. உச்சத்தில் டிக் டாக் பிரபலம்! ஒரு எபிசோடுக்கு இவ்வளவு பேமண்டா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் எடுக்கப்படும் சீரியல்கள் பெரும்பாலும் கதாநாயகிகளை மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. 

அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகள் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பெறுவதற்காக வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களையும் ரியாலிட்டி ஷோ க்களையும் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், தற்போது சன் டிவியில் நடிக்கும் சீரியல் கதாநாயகிகளின் சம்பள விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி, ஒரு எபிசோடுக்கு குறித்த சீரியல் நாயகிகள் வாங்கும் சம்பளம் குறித்த விவரத்தை பார்ப்போம்.

சன் டிவியில் இளம் ரசிகர்கள் முதல் இல்லத்தரசிகளை கவர்ந்த சீரியலில் ஒன்றுதான் சுந்தரி. இந்த சீரியல் டிஆர்பி பட்டியலிலும் இடம் பிடித்து வருகிறது. இதில் நாயகியாக நடிக்கும் கேப்ரியல்லா செலஸ் முதல் சீசனில் நடிக்கும் போது 20000 ரூபாவை ஒரு எபிசோடுக்கு வாங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து இரண்டாவது சீசனில் நடிப்பதற்காக ஒரு எபிசோடிற்கு 40 ஆயிரம் வரை  வாங்குவதாக கூறப்படுகிறது. இவர் ஒரு டிக் டாக் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.


இவரை தொடர்ந்து கயல் சீரியலில் நடிக்கும் நடிகை சைத்ரா ரெட்டி, ஒரு எபிசோட்டுக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் வாங்கி வருகிறாராம். ஆரம்பத்தில் தெலுங்கு சீரியலில் நடித்த இவர், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்திருந்தார். அதன் பின்பு யாரடி நீ  மோகினி என்ற ஜீ தமிழ் சீரியலில் வில்லியாக நடித்து  பிரபலமானார். தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் நடித்து வருகிறார்.


இவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் ஆலியா மானசா. இவர் ஒரு எபிசோடுக்கு 20 ஆயிரம் வாங்குவதாக கூறப்படுகிறது. டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து,  அதில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை  காதலித்து திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்தார். அதன் பின் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவி இனியா தொடரில் நடித்து வருகிறார்.


இவர்களைத் தொடர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகை லிஸ்டில் உள்ளவர் தான் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா. இவர் ஒரு எபிசோடுக்கு 18000 ரூபாய் வாங்குவதாக கூறப்படுகிறது. இவர் சன் டிவி சீரியல் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார்.


ஐந்தாவது இடத்தில் உள்ள நடிகைகள் தான் சிங்க பெண்ணே சீரியல் நடிகை மனீஷா மகேஷ், வானத்தை போல மான்யா ஆகிய இருவருமே ஒரு எபிசோடுக்கு சுமார் 15,000 ரூபா விதம் பெறுவதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement