• Mar 08 2026

சாட்சிகளை தவிடுபொடியாக்கிய ரோகிணி.. புதிய சிக்கலில் மாட்டும் விஜயா

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  மனோஜ்  பிரவுன் மணிக்கு காசு கொடுத்து தான் சாட்சி சொல்ல வைத்தார் என்று  ரோகிணி வாதாடுகின்றார்.  இதனால் மனோஜின் சாட்சிகள் ஆதாரங்கள் இல்லாத படியால் செல்லுபடியாகமல் போகிறது.

பின்பு ரோகிணி, தனக்கு மனோஜுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூற,  மனோஜ் எனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறுகின்றார். இதனால்  அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்குமாறு  நீதிபதி உத்தரவிடுகிறார்.

இதன் போது ரோகிணி விஜயாவிடம் சென்று, தன்னை  மனோஜுடன் சேர்ந்து வாழ விடுமாறு கேட்கின்றார். ஆனால் அவர் முடியாது என்று சொல்ல, நான் அவருடன் சேர்ந்து வாழ்வேன் என்று சவால் விட்டு செல்கின்றார் ரோகிணி. 


விஜயா வீட்டுக்கு சென்றதும் மனோஜ்க்கு திட்டுகின்றார். மேலும்  ரோகிணியின் சகவாசம் வேணாம். அந்த பிசினஸ் டீலை  கேன்சல் பண்ணுமாறு சொல்லுகின்றார். ஆனாலும் தான் அதை நம்பி மேலும் கடன் வாங்கியதாக சொல்ல,  எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

பின்பு இரவு  யாருக்கும் தெரியாமல் விஜயா மனோஜிடம், தான் அந்த கடனை அடைக்க சிந்தாமணியிடம் காசு வாங்கி தருவதாகவும் ரோகிணியை கடைப்பக்கம் விட வேண்டாம் என்றும்  கூறுகின்றார். இதனை  மீனா கேட்டுவிட்டு  முத்துவிடம் சொல்லுகின்றார். 

இறுதியில் ரோகிணி  ஷோரூமுக்கு செல்லும்போது அங்கு ஜீவாவும் சந்தோஷும் அவரை தடுக்கின்றார்கள்.  மேலும் மனோஜ் தான் உங்களை உள்ள விட வேண்டாம் என்று சொன்னதாகவும் குறிப்பிடுகின்றனர். 

எனினும்  தனக்கு இந்த கடையில் உரிமை இருக்கு என்று அவர்களை தட்டி விட்டு செல்கின்றார் ரோகிணி. இதுதான் இன்றைய எபிசோட் .

Advertisement

Advertisement