• Sep 13 2024

80ஸ் பாட்டைப் போட்டு ஹீரோவப் பில்டப் பண்றாங்க.... நாங்க 80ஸ் படம் எடுத்து அதுக்கு பில்டப்னு பேர் வச்சோம்... லோகேஷை வம்புக்கு இழுக்கும் சந்தானம்...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

80ஸ் பில்டப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானம் காமெடியாகப் பேசி அசத்தினார். கே.எஸ்.ரவிகுமார் சார் சொன்னாங்க. சந்தானம் தொடர்ந்து காமெடிலயே போய்க்கிட்டு இருக்காருன்னாங்க என்று அதுக்கு முக்கிய காரணம் என்னோட ரசிகர்கள். இந்தப்படத்துக்கு ஞானவேல் சார் தான் டைட்டில் வச்சிருப்பாருன்னு நினைச்சேன்.


இப்ப வர்ற நிறைய படங்கள்ல 80ஸ் பாட்டைப் போட்டு ஹீரோவப் பில்டப் பண்றாங்க. நம்ம 80ஸ்ல படம் எடுத்து அதுக்கு ஏன் பில்டப்னு படம் வைக்கக்கூடாது அப்படின்னு யோசிச்சிருப்பாரு. ஏன்னா கொஞ்சம் அந்த மாதிரி ஆளுதான் அவரு. நாங்க ரெண்டு பேரும் கோவை பாஷைல பேசிக்கொள்வோம். அவரும் நானும் ஒரே டைம் பீரியடுல தான் சினிமாவுல அடி எடுத்து வச்சோம். ஆரம்பத்துல நாள் கணக்குல தான் நான் சம்பளம் வாங்கினேன்.கொஞ்ச நாளுக்கு அப்புறம் அந்த நாள் கணக்குல வாங்குன சம்பளத்தையே கொஞ்சம் அதிகமாக்குனேன்.


இதன் மூலம் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தனது படங்களில் பழய பாடல்களை வைத்து ட்ரெட்க்காட்டி இருப்பார். அதனையே சந்தானம் இவ்வாறு மறைமுகமாக பேசுகிறார் என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement