• Jan 19 2025

பொறுத்தது போதும்.. இனிமேல் உயிரை எடுத்துவிட வேண்டியதுதான்.. அதிர்ச்சி முடிவெடுத்த ரோகிணி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்  தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம் இன்னும் முடியாமல் உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்தால் ரோகிணி அப்பா வருவதை மறந்து இருந்த விஜயா, இன்றைய எபிசோடில் திடீரென நியாபகம் வந்து அவரை வறுத்து எடுக்கும் காட்சிகளும் இதனை அடுத்து ரோகிணி மீண்டும் மீண்டும் பொய் சொல்லும் காட்சிகள் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம். 

அதுமட்டுமின்றி நாளைய எபிசோடில் மீண்டும் ரோகிணி மாமாவாக நடித்தவர் வந்து ’ரோஹினி அப்பா மலேசியா சிறையில் இருக்கிறார் என்றும் அவரது தொழில் பார்ட்னர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்றும் கதை விடுகிறார். இதனை அடுத்து நீலிக்கண்ணீர் வடிக்கும் ரோகிணியை பரிதாபமாக அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் மாமா ஒரு விஷயத்தை உளற அதை மீனா கண்டுபிடிக்கும் காட்சிகளும் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது என்பதை குறிப்பிடத்தக்கது. 



இந்த நிலையில் அப்பா வருவார், அப்பா வருவார் என்று பொய் சொல்லிக் கொண்டிருப்பது தனக்கு ஆபத்தாக முடியும் என்று முடிவு செய்த ரோகிணி, அப்பாவின் உயிரை எடுத்து விட முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. அதாவது அப்பா இறந்துவிட்டார், இனி அப்பா இந்தியாவுக்கு வர மாட்டார், அவருடைய சொத்துக்களையும் அவர் புதிதாக திருமணம் செய்த பெண் எடுத்துக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்பது போன்று ரோகிணி   கதை கட்ட இருப்பதாகவும் இந்த காட்சிகள் இன்னும் ஒரு சில நாட்களில் வரும் என்றும் தயாரிப்பு வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. 

அப்படி மட்டும் நடந்தால் விஜயாவின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement