விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கிறது என்று பார்ப்போம். மீனா முத்துவிடம் கோயிலில் உள்ள கேமராவில் பார்த்தால் பணத்தை எடுத்தது யார் என்று தெரியும் என ஐடியா கொடுக்கிறார். உடனே ரோகிணி "அது எல்லாம் வேனா இது வரைக்கும் நீங்க பண்ணிய உதவியே போதும்" என்று சொல்கிறார்.
அதற்கு முத்து "இவ்வளோ செஞ்சிட்டோம் இப்போ வந்து வேணா சொன்னா எப்படி பணத்தை கண்டு புடிக்காம விடமாட்டோம். பணம் கிடைச்ச உடனே இங்க எல்லாருக்கும் சொல்லணும் எங்களை மட்டும் தான் ஏமாற்ற தெரியும் வெளியே போன ஏமாந்து தான் வருவாங்க" என்று சொல்கிறார்.
பிறகு மீனா மற்றும் முத்து ரோகிணி சொன்னது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பிறகு மீனாவின் பூ ஓடர் பிஷனஸ் பற்றி பிளான் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். மீனா என்னுடைய ஆல் பேர் ரஜனிகாந்த் பாடலில் வரும் என்று சொல்கிறார். முத்து யார் யார் என்று கேட்கிறார். கோபப்பட்ட மீனா யாரை கேட்குறீங்க என்று கேட்கிறார். அப்போது மீனா நீ ஒரு கண்ணகி என்று சொல்கிறார் அதற்கு மீனா அப்ப நீங்க கோவலனா ஏதாவது மாதவியை தேடி போக போறீங்களா என்று கேட்கிறார். முத்து இல்லை இல்லை மீனா என்று அன்பாக சமாளிக்கிறார். பின்னர் பாட்டு பாடி ரோமென்ஸ் செய்கிறார்.
இன்னொரு பக்கம் வித்யாவை பார்க்க முருகன் வருகிறார். உங்களுடைய பைக் செய்துட்டேன் காசு எல்லாம் வேணா என்று சொல்கிறார். அவரை நினைத்து வித்யா சிரித்து கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு வந்த ரோகிணி வீட்டில் நடந்த விடயம் பற்றி சொல்கிறார். சிட்டியை பார்க்க அழைத்துசெல்கிறார்.
இன்னொரு பக்கம் சத்யா சொன்னதை கேட்டு சிட்டி தான் வீடீயோவை லீக் பண்ணி இருப்பான் என்று முத்து மீனா சத்தியாவுடன் கதைத்துக்கொண்டிருக்கிறார்கள். ரோகிணி மற்றும் வித்யா சிட்டியை நேரிலில் பார்த்து நடந்த விடயத்தை சொல்லி உதவி கேட்கிறார். பணத்தை கண்டு பிடிக்க உதவி கேட்கிறார். அத்தோடு கோவிலில் இருக்கும் வீடியோவை எடுக்குமாறும் சொல்கிறார். அதற்கு சிட்டியும் ஓகே சொல்கிறார். அத்தோடு இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது.
Listen News!