• Dec 19 2025

ரத்தான இண்டிகோ விமானம்.. சிக்கிய ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா.! கவலையுடன் வெளியிட்ட பதிவு

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

இந்தியாவின் மிகப்பெரும் விமான நிறுவனம் இண்டிகோ நேற்று டிசம்பர் 5ஆம் தேதி விமானிகள் பற்றாக்குறையால் ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு வந்தது. ஒரு நாளைக்கு சுமார் 2,200 விமானங்களை இயக்கும் இந்த நிறுவனம், நேற்று சுமார் 1,000 விமானங்களை ரத்து செய்யும் தீர்மானம் எடுத்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளானனர்.


இந்தப் பிரச்சனையில் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மகள் மற்றும் மருமகன் கூட சிக்கிக்கொண்டனர். அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வாரணாசியில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ய இண்டிகோவில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த இந்த இருவரும், முதலில் விமானம் இயக்கப்படும் என்று நிறுவனத்தின் அறிவிப்பில் கூறப்பட்டதால் அவர்கள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். ஆனால் விமானம் அங்கு இயக்கப்படவில்லை, அதனால் பயணிகள் பெரும் மனஅழுத்தத்தில் இருந்தனர்.


இது குறித்து இந்திரஜா, "நாங்கள் ஒரு வேலையாகத் தான் வாராணாசி வந்தோம். ஆனால் இப்போது எப்படி சென்னை செல்வது என்று தெரியவில்லை. இது மட்டும் இல்லாமல், எங்களுக்கு இங்கு தெரிந்தவர்கள் இருப்பதால் நாங்கள் அங்கு சென்று விடுவோம். 

ஆனால் மற்றவர்களின் நிலையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. மேலும் வயதானவர்கள் பலரும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்." எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

Advertisement