கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சர்கார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பல அடிகளை வாங்கினாலும், வணிக ரீதியாக வெற்றிப்படமாக காணப்பட்டது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ரகுமான் இசையில் அந்த படத்தில் இடம்பெற்ற தளபதி நடனம் மற்றும் சண்டை காட்சிகள் திரையில் பார்க்கும்போதே தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது.
சர்கார் படமும் அரசியல் பற்றி பேசுவதாக அமைந்தது. அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருக்கு தனது வாக்கை செலுத்த முடியாமல் போன நிலையில், அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள், இறுதியில் வாக்காளர்களின் உரிமையை வலியுறுத்தி, அரசியலில் பெற்ற வெற்றி என்பன இந்தப் படத்தில் முக்கிய அம்சங்களாக காணப்பட்டன.

சமீப காலமாகவே விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அவருடைய அரசியலை மையப்படுத்தியே எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அடுத்ததாக விஜய் நடிப்பில் ஜனநாயகன் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில், சர்கார் படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் தொடர்பான ஏ ஐ புகைப்படங்களை இணையவாசி ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் நடனம் ஆடிக்கொண்டே விஜய் சண்டை செய்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Listen News!