• Dec 19 2025

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்.. இயக்குநர் யார் தெரியுமா.?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சமீபத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகும் படங்களின் வரிசையில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம், ரசிகர்கள் மற்றும் திரை விமர்சகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தப் புதிய திரைப்படத்திற்கு “ஹாப்பி ராஜ்” என்ற பெயர் வைத்துள்ளதாக, இயக்குநர் மரியா இளஞ்செழியன் அறிவித்துள்ளார். இது ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு மிகவும் எதிர்பார்ப்பான படமாக மாறி விட்டது, ஏனெனில் அவர் கடந்த சில வருடங்களாக பெரிய திரையில் சூப்பரான படங்களில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜிவி பிரகாஷ் தமிழ் திரையுலகில் தனது திறமையான நடிப்புக்கு பிரபலமாக உள்ளவர். இவர் நடித்திருந்த பல படங்கள், ரசிகர்களிடையே பெரிய ஆதரவைப் பெற்றுள்ளன.


இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய தகவல் என்னவென்றால், நடிகர் அப்பாஸ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் கடந்த காலங்களில் நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அப்பாஸ் திரையில் நடிப்பது, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் படத்திற்கு புதிய உற்சாகம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement