• Jan 19 2025

வெளியானது நடிகர் சூரியின் அடுத்த திரைப்பட அப்டேட்... வித்தியாசமான கதைக்களத்துடன் மிரளவைக்கும் நடிகர் சூரி...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சினிமா திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி ரசிகர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் இன்று வரைக்கும் கொடி கட்டி பறக்கும் காமெடி நடிகர் சூரி. இவர் காமெடியனாக இருந்தாலும் தற்போது திரைப்பட நாயகனாக அறிமுகமாகி வெற்றி கோடி நாட்டியுள்ளார். 


ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களிடத்தின் நல்ல வரவேற்ப்பு பெற்ற இவர் தற்போது கதையின் நாயகனாக கருடன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌


இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.


இந்த கருடன் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூரி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றமும், வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய காணொளியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சூரி - சசிகுமார் - உன்னி முகுந்தன்- சமுத்திரக்கனி - R S. துரை செந்தில்குமார் என நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிணைந்து, 'கருடன்' திரைப்படத்தை உருவாக்கி இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. 


Advertisement

Advertisement