• Jul 27 2024

அர்ச்சனா என்ன எபோர்ட் குடுத்தாங்க? பேட்டியில் ஆவேசமாக கத்திய கானா பாலா! திடுக்கிடும் காரணம்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றிய போட்டியாளர்களுள் கானா பாலாவும் ஒருவராக காணப்படுகிறார். இவர், இறுதியாக இடம்பெற்ற பிக் பாஸ் பைனலில் பாட்டுப் பாடி பட்டையை கிளப்பி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா பற்றி அவர் கூறிய கருத்துக்கள் வைரலாகி உள்ளது.


அதன்படி அவர் அள்ளித் பேட்டி ஒன்றில், அர்ச்சனாவை விளாசி தள்ளியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

பிக் பாஸ் வீட்டுக்கு வந்த அர்ச்சனா என்ன எபோர்ட் குடுத்தாங்க.. ஒரு சின்ன பிரச்சனை. சண்டை போட்டாங்க. அதுக்கு அப்புறம் அழுகிறாங்க.அப்படியே நாலு வாரம் ஓட்டினாங்க.. இதுல என்ன எபோர்ட் குடுத்தாங்க.


பிக் பாஸ் வர முதல் மென்டெல் டெஸ்ட், பிஸிக்கல் டெஸ்ட், பிளட் டெஸ்ட் எல்லாமே எடுத்து தான் அனுப்புறாங்க. ஆனா உள்ள வந்த முதல் நாளே அழுதாங்க.

நானும் பிக் பாஸ் வீட்டுல பாத்திரம் கழுவினான், மரக்கறி வெட்டினான், சமைச்சன் எல்லாம் செய்தேன். நான் என்ன பயப்பட்டானா? இது லேடீஸ் வேலை என்று..

ஆனா அர்ச்சனாவுக்கு ஆட, பாட, நடிக்க எல்லாமே தெரியும். ஆனா பிக் பாஸ் வீட்டுல என்ன எபோர்ட் குடுத்தாங்க என்று தெரியல.. இவ்வாறு கானா பாலா சொல்லி உள்ளார்.

Advertisement

Advertisement