தமிழ் சினிமாவில் இதுவரை சர்ச்சைகளில் சிக்காத, சிறந்த மனிதராகவும் நடிகராகவும் பார்க்கப்பட்டவர் நடிகர் ரவி மோகன். ஆனால் சமீப காலமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
அதன் அடிப்படையில் சமீபத்தில், தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அவர் அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, ஆர்த்தி தனது ஆதங்கங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார்.
இந்த விவாகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கிய நிலையில், நீதிமன்றம் இரு தரப்பினரும் தங்களது தனிப்பட்ட கருத்துகளை பொது வெளியில் பகிர்வதற்கு தடை விதித்தது.
இன்னொரு பக்கம் ரவி மோகன் தனது வாழ்க்கையை சுதந்திரமாக வாழ தொடங்கியுள்ளார். அதன்படி தனது நெருங்கிய தோழியான பாடகி கெனிஷாவுடன் கோயில்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொது இடங்களில் தான் செல்லும் இடமெல்லாம் கையோடு அழைத்துச் சென்றார். இது பல கேள்விகள் எழுவதற்கு காரணமானது.
இந்த நிலையில், பாடகி கெனிஷா சமீபத்தில் கடந்த 7-ஆம் தேதி தனது 27-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை தொடர்ந்து, அந்த நாளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில், ரவி மோகன் அவருக்கு பூங்கொத்து வழங்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
மேலும், அந்த புகைப்படங்களுடன் இணைத்து ரவி மோகன் குறித்து கெனிஷா மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நீண்ட பதிவையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், என்றென்றைக்கும் அன்பு இருக்கும்.. சின்ன வயசுல இருந்தே பல நேரங்கள்ல ஒரு ஆளாகவே நான் மதிக்கப்படவில்லை.. என்ன எல்லோரும் ஒதுக்கி வச்ச மாதிரி பீல் பண்ணி இருக்கன்.. நான் பெருசா எதிர்பார்க்கிற மாதிரி எல்லாரும் நினைப்பாங்க.. ஆனா நான் எதிர்பார்த்தது எல்லாம் ஒரு சின்ன அன்புக்காகவும், மதிப்புக்காகவும் தான்..
நான் என்னைக்கு நானாக வாழ ஆரம்பிச்சனோ அன்னைக்கு இந்த உலகமே எனக்கு மரியாதை கொடுத்து, நிறைய சந்தோஷங்களை கொடுத்துச்சு..
அப்புறம் ரவி மோகன்.. நீ வந்த பிறகு என் உலகமே மாறிடுச்சு.. என்னோட எண்ணங்கள், செயல்கள், காதல் பத்தின என்னோட பார்வை எல்லாம் புதுசா இருந்துச்சு.. இதை மத்தவங்க எப்படி வேண்டுமென்றாலும் நினைக்கலாம்.. ஆனால் நம்மள தெரிந்தவர்களுக்கு நாம் எவ்வளவு உண்மையா, நிம்மதியாக இருக்கும் என்று தெரியும்..
என்னோட கஷ்ட நேரங்கள்ல துணையாய் இருந்து சின்ன சின்ன வெற்றியை கூட உன்னோட வெற்றியா கொண்டாடி இருக்க.. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.. என்னோட இந்த பிறந்த நாளை இவ்வளவு அழகா அன்பால நிரச்சதுக்கு ரொம்ப நன்றி .
உன்னோட கசப்பான விஷயங்கள் எத்தனையோ இருக்கலாம்.. ஆனா எனக்காக நீ ஓடி ஓடி செய்த விஷயங்களை பார்த்தால் எனக்கு ஆச்சரியமா இருக்கு.. இனி வரப் போற காலம் நமக்கானது.. அதை நினைச்சு எனக்கு பயமில்லை. அந்த எதிர்காலத்துல இன்னும் உன் கூட சேர்ந்து ரொம்ப சந்தோஷமா ஜாலியா ஒரு ஆட்டம் போட்டுக்கிட்டே இருப்பேன்.. என்று பதிவிட்டுள்ளார்..
மேலும் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ரவி மோகன் அவருக்கு பூங்கொத்து கொடுப்பது போல் உள்ளது. எனவே பலரும் ரவி மோகன் கெனிஷாவுக்கு ப்ரொபோஸ் பண்ணுகின்றாரா என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளனர்.
Listen News!