• Feb 14 2026

‘ஜனநாயகன்’ 19-ல் ரிலீஸா? வெளியான அதகள அப்டேட்

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே ஜனவரி மாதத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  சென்சார் சான்றிதழ் தொடர்பான காரணங்களால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ எதிர்வரும்  19-ஆம் தேதி வெளியாகும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இதுகுறித்து தயாரிப்பு தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சென்சார் பிரச்சினைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பிறகே புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதுவரை  19 ரிலீஸ் என்பது உறுதி செய்யப்படாத தகவலாகவே பார்க்கப்படுகிறது.


அதேநேரத்தில், ஜனநாயகன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட சென்சார் வழக்கு நேற்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீட்டிற்கு இருந்த முக்கிய தடையாக கருதப்பட்ட சட்ட சிக்கல் நீங்கியுள்ளது.  

இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதன் மூலம், படத்தின் ரிலீஸ் இனி சீராக இருக்கும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement