• Aug 10 2025

நடிக்க கூடாதுன்னு சொன்னாங்க… இப்போ ஓட்டும் போட விடல.. ஆதங்கத்துடன் பேசிய ரவீனா.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை சென்னை, விருகம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. சுமார் 2,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வந்துள்ளனர். ஆனால், வாக்களிக்க வந்த நடிகை ரவீனாவுக்கு ஓட்டுப் போட அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தேர்தல் ஆரம்பமான சில மணி நேரங்களுக்குள் நடந்த இந்த சம்பவம், அப்போது அங்கு இருந்த பத்திரிகையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சின்னத்திரைத் துறையில் பல்வேறு தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற ரவீனா, தனது வாக்குரிமையை பயன்படுத்தும் நோக்கத்துடன் விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார். ஆனால், அங்கு இருந்த தேர்தல் பொறுப்பாளர்கள், அவருக்கு வாக்களிக்க அனுமதியளிக்காது இருந்துள்ளனர்.


இதைப் பற்றி ரவீனா செய்தியாளர்களிடம், “ஓட்டு போடலாம்னு வந்தேன் ஆனா என்ன ஓட்டு போட விடல. என்னை சங்கத்திலிருந்து வெளியேற்றி, ரெட் கார்டு கொடுத்ததுனால நடிக்க கூடாதுன்னு சொன்னாங்க. இப்போ ஓட்டும் போடக்கூடாதுன்னா எப்படி... இது எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது.” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement