சின்னத்திரையில் சமீபகாலமாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற குக்கிங் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது தான் ‘டாப் குக்கு டூப் குக்கு’. இந்த நிகழ்ச்சி, சன் டீவியில் ஒளிபரப்பானது. அதன் முதல் சீசன், ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, TRPயும் சிறப்பாக பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 'டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2' வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான சிவாங்கி, இப்போது 'டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2'-இன் தொகுப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.
இந்த சீசனில் மொத்தம் 8 போட்டியாளர்கள் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகின. அந்தவகையில், டெல்னா, ஷிவானி நாராயணன், வாஹீசன், ப்ரீத்தா , ரோபோ ஷங்கர் , கிரண் , பிரியங்கா மற்றும் பெசன்ட் ரவி ஆகியோர் இதில் போட்டியாளர்களாக கலந்துகொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!