• Jan 19 2025

பாக்கியாவுக்கு ராமமூர்த்தி கொடுத்த இறுதி ஆசீர்வாதம் .. அமிர்தாவுக்கு கிடைத்த பணக்கட்டு

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராமமூர்த்தி வீட்டார்கள் எல்லாரையும் உட்கார வைத்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றார். ஈஸ்வரி தான் தூங்க போவதாக எழுந்து  செல்லவும் அவரைவிடாமல் எல்லோருடன் சந்தோஷமாக கதைத்துக் கொண்டிருக்கின்றார். இனியாவும் அந்த தருணத்தில் போட்டோ எடுத்து மகிழ்கிறார்.

இதை தொடர்ந்து செல்வியிடம் நீ பாக்கியாக்கு எப்பயும் துணையாய் இருக்கணும். அவ உன்ன ஒரு சகோதரியா, நண்பியா  பார்க்கிறா, அதனால நீங்க எப்பயும் துணையாக இருக்க வேண்டும் என்று சொல்ல, 80 வயசானதும் உங்க அட்வைஸ் கூடி போயிட்டு என செல்வி நக்கல் அடிக்கின்றார். அதன் பிறகு செல்வி கிளம்பி வீட்டுக்கு செல்கின்றார்.

இதை அடுத்து ராமமூர்த்தி பாக்கியாவுக்கு நீ ரொம்ப நல்ல பொண்ணு. உங்க அப்பா எனக்கு நல்ல நண்பர். நீ பிறந்ததுமே நீதான் என் மருமகள் என்று முடிவு எடுத்துட்டேன். ஆனா இப்போ உன்  வாழ்க்கை இப்படி ஆயிற்று. நீ நல்லா இருக்கணும். மத்தவங்களுக்காக உழைக்காம கொஞ்சம் உன்னையும் பாரு  என்று எமோஷனலாக கதைக்கின்றார். இறுதியில் பாக்கியாவை பார்த்து ஆசீர்வாதம் பண்ணி விட்டு செல்கிறார்.


மறுபக்கம் எழில், நிலா, அமிர்தா கதைத்துக் கொண்டிருக்க, நிலாவுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக பாக்கியா அனுப்பிய பையை எடுக்கின்றார் அமிர்தா. அதன் போது அடியில் காசு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார். அதற்கு எழில் இது அம்மா தான் வச்சிருப்பாங்க. அம்மாவின் அக்கவுண்ட்ல போட்டு விடு என்று சொல்ல, வேண்டாம் அம்மா கஷ்டப்படுவாங்க இதை நானே வைத்துக் கொள்கிறேன் என அமிர்தா சொல்லுகிறார்.

இறுதியாக ராமமூர்த்தி தூக்கம் வராமல் எழுந்து உட்கார்ந்து தண்ணி குடித்ததோடு நெஞ்சை தடவிக் கொண்டிருக்கின்றார். மேலும் ஈஸ்வரி படுத்து தூங்குவதை பார்த்து சந்தோஷப் படுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement