தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஒட்டுமொத்த திரையுலகையும் கலக்கி வருபவர் ரஜினிகாந்த். தற்போது இளம் வயதை சேர்ந்த கதாநாயகர்களே சினிமாவில் தாக்குப் பிடிக்க தத்தளிக்கும் நிலையில், சுமார் 70 வயதை கடந்தும் கதாநாயகனாக வலம் வருகின்றார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான படங்களில் ஜெய்லர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்திருந்தது. இதன் இரண்டாம் பாகம் தொடர்பிலான டெய்லரும் அண்மையில் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கொடுத்து இருந்தது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் பாலிவுட்டின் பிரபல பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கர் சுமித் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூலி படத்தின் முதல் நாள் கலெக்சன் பற்றிய கணிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி கூலி படத்தின் ஓவர் சீஸ் டிக்கெட் புக்கிங் மட்டுமே தற்போது 25 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாட்டில் மட்டும் 70 முதல் 80 கோடி வரை வசூல் செய்யும் எனவும் கணித்துள்ளார்.
கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட முக்கியமான பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இந்தப் படம் அனைத்து மாநிலங்களிலும் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கூலி திரைப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் மட்டும் 130 அல்லது 140 கோடி வரையில் உலக அளவில் வசூல் ஈட்டும் என சுமித் சுட்டிக்காட்டி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Coolie is on a RAMPAGE With ₹25 Cr+ in Pre-Sales (6 days left!), the film is tracking an INSANE ₹70-80 Cr overseas Day 1 (including premieres).
Worldwide Day 1 Gross now looks set to land in the ₹130-140 Cr range MINIMUM .
For #War2 to match up Coolie’s OD, it’ll need to…
Listen News!