• Nov 22 2024

தமிழ்த் திரையுலகினருக்கு கிடைத்த பேரதிர்ச்சி... ரஜினி, கமல் பட இயக்குநர் உயிரிழப்பு

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்  தான் துரை.

இவர் ‘அவளும் பெண்தானே’  என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்பின் ரஜினி நடிப்பில் சதுரங்கம், ஆயிரம் ஜென்மங்கள்  மற்றும்  கமல்ஹாசன் நடிப்பில் நீயா, மரியா டார்லிங் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் மோகன் நடித்த ’கிளிஞ்சல்கள்’ சிவாஜி கணேசன் நடித்த ’துணை’ ஆகிய படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இறுதியாக 1990 ஆம் ஆண்டு ’புதிய அத்தியாயம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வெளியான ’பசி’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, சிறந்த தமிழ்ப்படம் என்ற தேசிய விருதை பெற்றது.இந்த படத்தில் நடித்த நடிகை ஷோபாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.


அதுமட்டுமின்றி, ‘ஒரு வீடு ஒரு உலகம்’ என்ற படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இயக்குனர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.  அத்துடன் இவருக்கு  பிலிம் விருது உட்பட கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது பிரபல இயக்குனர் துரை தனது 84வது வயதில் உயிரிழந்துள்ளார். இந்த தகவல் தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறு இயக்குனர் துரை திருவள்ளூரில் உள்ள அவரது வீட்டில் காலமான நிலையில், அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




Advertisement

Advertisement