• Jan 19 2025

விஜயாவுக்கு வில்லியாக என்ட்ரி கொடுக்கும் மூத்த நடிகை! சிறகடிக்க ஆசை தெறிக்கப் போகுது!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை செய்ய தற்போது சுவாரசியமாக ஒளிபரப்பாக வருகின்றது. நாளுக்கு நாள் மாறுபடும் இதன் கதையை அம்சம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கடந்த வாரம் வெளியான  TRP  ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தெரிவித்து வரும் நிலையில், அவற்றை பின்னுக்கு தள்ளி சிறகடிக்க ஆசை சீரியில் நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த நிலையில், சிறகடிக்க சீரியலில் முத்துவின் பாட்டி மீண்டும் என்ட்ரி ஆகவுள்ளார். இதனை இந்த சீரியல் நடிகைகள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் மூலம் உறுதியாகி உள்ளது.


விஜயா தனது மருமகள்களில் மீனாவை மட்டும் வேலைவாங்குவது, திட்டுவது என இருக்கும் நிலையில், விஜயாவுக்கு மாமியாரான அண்ணாமலையின் அம்மா அவரை அடக்கும் ஒருவராக காணப்படுகிறார்.

இதனால் தற்போது வெளியான புகைப்படத்தில் அவர் ஸ்ருதியின் அம்மா சுதா மற்றும் பார்வதியுடன் காணப்படுகிறார். இதனால் இனி வரும் காட்சிகளில் அவர் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் மீண்டும் வந்தால் விஜயாவுக்கு வில்லியாகவும், மீனாவுக்கு ஆதரவாகவும் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement