• Sep 08 2025

சினிமா ஹீரோக்கள் ரியல் லைஃப் ஹீரோக்களாக..ராகவா லாரன்ஸ் & பாலாவின் புதிய முயற்சி..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகத்தில் சில பிரபலங்கள், வெறும் திரையரங்குகளில் மட்டுமல்லாமல், சமூக மேம்பாட்டிலும் தங்களின் பங்களிப்புகளை வழங்கி வருகிறார்கள். இப்போது அந்த பட்டியலில் முன்னணி இடம் வகிக்கும் இருவர், நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா. இவர்கள் சமூக சேவை செய்வதற்கு சிறந்த  உதாரணமாக காணப்படுகின்றனர்.


இவர்கள் இருவரும் அண்மையில் வந்தவாசி அருகே அமைந்துள்ள இரும்பேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஒரு சிறப்பான நிகழ்வில் பங்கேற்றனர். ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய கழிவறை கட்டடம், அவர்கள் இருவராலும் திறந்து வைக்கப்பட்டது.


இந்த கழிவறை கட்டடம், மாணவர்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், ஆசிரியர்கள் மற்றும் போலீசார் என முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

Advertisement

Advertisement