• Nov 05 2025

நாய்கள் முக்கியமா? பிள்ளை உயிரா?அடக்க முடியாத கோபத்தில் ஜிபி முத்து வைரலாகும் வீடியோ..!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, தெருநாய்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்துகள் குறித்து மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல யூடியூப் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில்  ஜிபி முத்து தனது காணொளியில், பெற்றோர் மனதை பதற வைக்கும் வகையில் தனது அனுபவத்தையும் கருத்தையும் பகிர்ந்துள்ளார்.


“எத்தனை பிள்ளைகளுக்கு நாய்கள்  கடிக்குது தெரியுமா?” என்று தொடங்கும் உரையில், தெருநாய்கள் தாக்கிய பல குழந்தைகள் ரேபிஸ் போன்ற மோசமான நோயால் பாதிக்கப்பட்டதாகவும், சிலர் உயிரிழந்ததாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.

“பேசுறதுக்கு முன்னாடி யோசிக்கணும். நாய்களை வளர்க்க விரும்புறவர்கள், வீட்டுக்குள்ளே பாதுகாப்பா வளர்த்துக்கணும். தெருநாய்களை காப்பாற்றணும் என்று சொல்லறது நல்ல விஷயம், ஆனா அதே நேரத்தில் பிள்ளைகளோட பாதுகாப்பும் முக்கியம்,” என அவர் தெரிவித்துள்ளார்.


இந்த காணொளி சமுதாயத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி, தெருநாய்கள் நிர்வாகம் மற்றும் பாசமுள்ள வளர்ப்பு இடையேயான சரியான சமநிலையை பற்றி சிந்திக்க வைத்துள்ளது. சமீப ஆண்டுகளில் தெருநாய்கள் தாக்குதலில் குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான செய்திகள் அதிகரித்து வரும் நிலையில், இது பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கான விழிப்புணர்வாக இருக்கிறது.

Advertisement

Advertisement