• Jan 19 2025

ராதிகா நடிக்கவுள்ள புத்தம் புதிய சீரியல்.. கூடவே இணையும் சந்திரமுகி பொம்மி! வெளியான அப்டேட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பி வந்தவர் தான் நடிகை ராதிகா. தற்போது வரையில் இளமை மாறாமல் அதே பொலிவுடன் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் நடிக்கும் புத்தம் புது சீரியல் 'தாயம்மா' விரைவில் ஒளிபரப்பப்படவுள்ளது.

அதன்படி, நடிகை ராதிகா நடிக்கும் புத்தம் புது சீரியல்  தான் 'தாயம்மா'. இது பொதிகை டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. 


நடிகை ராதிகா சரத்குமார் சீரியல்களில் நடிக்காமல் விலகி இருந்த நிலையில், பொதிகை டிவியில் விரைவில் தொடங்கப்பட உள்ள ‘தாயம்மா’ சீரியலில் நடிக்க உள்ளார். 

அத்துடன், தாயம்மா சீரியல் குடும்பக் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் இரண்டு மகள்களுக்கு தாயாக முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளாராம் ராதிகா.


இரண்டு மகள்களை வளர்ப்பதில் சிரமப்படும் ஒரு தாய் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி தாயம்மா சீரியல் பேசும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், இந்த சீரியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பொம்மி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement