நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் 36 வருடங்களுக்கு பிறகு உருவாகி உள்ள திரைப்படம் தக் லைப். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த மாபெரும் மணிரத்தினத்தின் படைப்புக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார். இப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் திகதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் அலி பசல் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது. ஆகையால் இதுகுறித்து தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் இயக்குனர் மணிரத்னம் சாருடன் பணிபுரிவது பெருமைக்குரிய விஷயம். இந்தப் படம் என்னை ஒரு நடிகனாக பல வழிகளில் முன்னேற்றி இருக்கிறது. இப்படம் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
இந்தியா மட்டுமில்லாமல் சர்வதேச பார்வையாளர்களையும் மயக்கும். எங்களது மேஜிக்கில் உருவாகியுள்ள இப்படத்தை மக்கள் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியவில்லை' என்று கூறியுள்ளார். இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விக்ரம் திரைப்படத்தின் பிறகு கமலஹாசனை வேறு ஒரு ஜோனரில் பார்க்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
Listen News!