• Dec 06 2024

ராதிகாவை புரட்டியெடுத்த மீடியா நியூஸ்..! பாக்கியா கேட்டக் கேள்வியில் அடங்கிய செழியன்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபிக்கு ஜாமீன் கிடைக்க, அவர் தனது  நண்பருக்கு நன்றி சொல்லுகின்றார். இதன் போது அவர் இனி எந்த பிரச்சினையும் சிக்கிக் கொள்ளாதே என அட்வைஸ் பண்ண, நீ ஜாமீன் எடுத்து விட்டது போதும் உண்ட அட்வைஸ் ஒன்றும் தேவையில்லை என சொல்லி தான் தனியாகவே வீட்டுக்கு செல்லுகின்றேன் என்று கிளம்புகிறார்.

மறுபக்கம் பாக்கியாவைப் பேட்டி எடுத்த செய்தியாளர்கள் இந்த சம்பவத்திற்கு ராதிகாவும் காரணம் என்று ஈஸ்வரியின் பழைய விஷயங்களை எல்லாம் டிவியில் பேசுகின்றார்கள். இதைப் பார்த்து ஈஸ்வரி கோபப்படுகிறார். மேலும் இதுக்குத்தான் அப்போதே சொன்னேன். நாளைக்கு இனியாக்கு கல்யாணம் என்றால் இது ஒரு பிரச்சினையாக வரும். அதனால் கோபிக்கு கொடுத்த கம்பளைண்ட்டை வாபஸ் வாங்குமாறு சொல்லுகின்றார்.

செழியனும் இனியாவும் அது போலவே அப்பாவுக்கு கொடுத்த கம்பளைண்ட்டை வாபஸ் வாங்குமாறு சொல்ல, பாக்கியா  அவர்களிடம் உங்களுடைய அப்பா பண்ணினது தப்பு தானே என்று கேட்க, அவர்களும் ஒத்துக்கொள்கின்றார்கள். ஈஸ்வரியும் அவன் தெரியாமல் செய்து விட்டான் என்று சொல்ல, அதற்கு தகுந்த பதில் அடி கொடுக்கின்றார் . இத்தனை நாட்களாய் அவர் அடிக்கும் போது நான் வாங்கிக் கொண்டு இருந்தேன். அப்போது உங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இப்போ நான் ஒரு அடி திருப்பி அடித்ததும் எல்லாரும் எப்படி துடிக்கிறீங்க என்று பேசுகின்றார்.


இதை தொடர்ந்து கோபி வீட்டுக்கு வந்ததும் ராதிகா, உங்கள பாக்கவே பிடிக்கல.. நான் என்ட பழைய லைப்ப மறந்து தான் உங்க கூட வாழ்கிறேன். உங்களால ஏன் அப்படி இருக்க முடியவில்லை என்று பேசுகின்றார். மேலும் உங்களையும் பாக்யாவையும் பிரித்தது நான் தான் என்று டிவில சொல்லுறாங்க. நாளைக்கு நான் எப்படி வெளியில முகம் காட்டுவேன் என்று திட்டி விட்டுச் செல்கின்றார்.

இறுதியாக கோபி அதே ஆத்திரத்தில் பாக்யா வீட்டுக்கு கிளம்பி வர கமலாவும் வருகின்றார். ஆனாலும் நான் இதை பார்த்துக் கொள்ளுகின்றேன் என்று தனியாக பாக்யா வீட்டுக்கு வந்து அவரை வெளியே நின்று கத்தி அழைக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement