• Jun 27 2024

ஈஸ்வரி மீது பழியை போட்டு துரத்தியடித்த ராதிகா... வேலையை காட்டிய கோபி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ராதிகா ஹாஸ்பிடலில் இருக்க கோபி அவரை பார்க்கச் சென்று நலம் விசாரிக்க, என் முகத்திலேயே முழிக்க வேணாம் என கோபியை  திட்டி அனுப்புகிறார் ராதிகா.

அதன் பிறகு ஹாஸ்பிடளுக்கு வந்த ஈஸ்வரி கோபியிடம் பேசிவிட்டு நேராக ராதிகாவை பார்க்கப் போகிறார். ஆனாலும் ராதிகா அவரின் கையை தட்டி விட்டு உங்களால தான் எல்லாம் நடந்தது. நீங்கதான் என் குழந்தையை கொன்னுட்டீங்க என்று  சொல்லுகிறார். இதைக்கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சியாக நிற்கிறார். கமலாவும் நானும் அதை  பார்த்தேன் எ சொல்லுகிறார்.

அந்த இடத்திற்கு கோபியும் வர, ஈஸ்வரி நான் எதுவுமே செய்யவில்லை என்று அழுது புலம்புகிறார். ஆனால் ராதிகாவும் கமலாவும் சேர்ந்து அவரை வெளியே போகுமாறு துரத்தி விடுகின்றார்கள்.  வெளியே வந்த ஈஸ்வரி கோபியிடம் பேச, கோபியும் இப்போ உங்களுக்கு சந்தோஷமா? உங்க மூத்த மருமகள், உங்க பேர பிள்ளைகள் எல்லாரும் இனி கௌரவமாக இருக்கலாம். குழந்தை வேணாம் வேணாம் என்று கடைசியாக இப்படி செஞ்சிட்டிங்களே என அவரும் பேசுகிறார். இதனால் ஈஸ்வரி என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டிருக்கிறார். 



மறுபக்கம் பாக்கியா ஈஸ்வரியை நினைத்து அழ, எழில் வந்து சமாதானப்படுத்துகிறார். அதன் பிறகு பாக்கியா மனம் கேட்காமல் ராதிகாவின் வீட்டுக்கு சென்று பார்க்கும் போது ஈஸ்வரி அங்கே இல்லை. ஈஷ்வரிக்கு கால் பண்ணும் போது அவர் அழுது கொண்டு போனை வைக்கின்றார்.

இதனால் வீட்டுக்கு வந்த பாக்கியா, செழியனிடம் சொல்லி கோபிக்கு போன் பண்ணி ஈஸ்வரி ஹாஸ்பிடலில் தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொள்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement