• Jan 18 2025

பழைய சங்கை ஊதும் பி.வாசு! சந்திரமுகி 2 பிளாப் காரணமே இவர்தான்!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் என பலரது நடிப்பில் வெளியானது. படம் சூப்பர் ஹிட் அடித்தது. ரிலீஸாகி 50 நாட்கள் கடந்த பின்னரும் தியேட்டரில் கூட்டம் குறையவில்லை.


வேட்டைய மன்னன் என்கிற வேடத்திலும், சரவணன் என்கிற மனநல மருத்துவர் வேடத்திலும் நடித்திருந்தார் ரஜினி. வேட்டைய மன்னனாக ரஜினி கொடுத்த அசத்தலான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. வடிவேலுவின் காமெடி, பாட்டு, பயம் என ரசிகர்களை கட்டி இழுத்தது இந்த திரைப்படம். 


அதன்பின் சில வருடங்கள் கழித்து சந்திரமுகி 2-வை எடுத்தார் பி.வாசு. ஆனால், ரஜினி நடிக்கவில்லை அவருக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடித்தார். ராதிகா, வடிவேலு, நித்யா மேனன் உள்ளிட்ட சிலர் நடித்தனர். ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை. குறிப்பாக சந்திரமுகியாக கங்கனா ரனாவத் நடித்ததும் செட் ஆகவில்லை. அதோடு, இணையத்தில் லாரன்ஸை ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். பல மீம்ஸ்களையும் உருவாக்கி பதிவிட்டனர்.


இந்நிலையில் பி.வாசு ‘சந்திரமுகி 2 தோத்து போனதுக்கு காரணம் அது ரஜினி சார் நடிக்க வேண்டிய படம். அவரிடம் கதை சொல்லை அவரும் நடிக்க சம்மதித்து விட்டார். ஆனால், சில காரணங்கால் அவரால் நடிக்க முடியவில்லை. அதன்பின்னர்தான் லாரன்ஸை நடிக்க வைத்தோம். லாரன்ஸுக்காக கதையில் சில மாற்றங்கள் செய்தோம் அதுதான் காரணம் என்று சமீபத்தில் ஊடகங்களுக்கு கூறியுள்ளார் 

Advertisement

Advertisement