நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி, எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சூது கவ்வும் திரைப்படம். இந்த படம் 2013ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி அர்ஜுன் இயக்கத்தில் சிவா, கருணாகரன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் தான் சூது கவ்வும் 2 நாடும் நாட்டு மக்களும்..
தமிழ் சினிமாவில் வெறித்தனமான காமெடி படமாக சூது கவ்வும் திரைப்படம் காணப்பட்டது. இந்த படத்தில் இடம் பெற்ற காசு பணம் துட்டு மணி மணி.. பாடல் வேற லெவலில் ஹிட் ஆனது. தற்போது இதன் இரண்டாவது பாகம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து புதிய டீமுடன் உருவாகி உள்ளது.
d_i_a
இந்த நிலையில், சூது கவ்வும் 2 திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றது. அதன்படி இந்த படத்தின் டிரைலர் எப்படி இருக்குது என்று பார்ப்போம்.
சிவாவின் படங்கள் என்றாலே பொதுவாக நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அவருடைய நடிப்பும் அப்படித்தான். அவர் சீரியஸாக முயற்சி எடுத்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு மூட்டும் வகையிலேயே காணப்படுகின்றது.
அவ்வாறுதான் சூது கவ்வும் 2 படத்தின் ட்டைலரிலேயே அமைச்சர் கடத்தப்படுவது போல் காட்டப்படுகிறது. அதில் சிவாவின் தோற்றமும் அவர் பேசும் வசனங்களும் வேற லெவலில் உள்ளது. அத்துடன் அவர் அடிக்கும் அரசியல் பஞ்ச் டயலாக்கும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றது.
அதுமட்டுமின்றி தெளிவா நிதானமா முடிவெடுக்கனும், சரக்கு இருக்கா இல்ல வாங்கணுமா? கல்யாணம் பண்ணினா நிம்மதி போயிடும் என்ற வசனங்களும் காணப்படுகின்றது. மேலும் இந்த படத்தை ஒரு முறையாவது தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
எனினும் இந்த படத்தில் விஜய் சேதுபதியை மிஸ் செய்தாலும் அதனை சிவா நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!