• Feb 23 2025

அந்த சைக்கோவ போட்டுத் தள்ளுங்க பாக்கியா! சரியான டைமிங்கில் என்ட்ரி கொடுத்த எழில்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், ஒரு வழியாக அமிர்தா தப்பிக்க நினைத்து கதவை திறக்க, அங்கு கணேஷ் மாப்பிள்ளை கோலத்தில் நிற்கிறார். மேலும், அங்கு அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பதற்காக ஐயர் ஒருவரையும் அழைத்து வந்து, அமிர்தாவை ரெடியாகுமாறு சொல்கிறார்.

இருந்தாலும், அமிர்தா அந்த ஐயரிடம் அவர் கடத்தி வைத்ததாகவும் தம்மை காப்பாற்றுமாறும் சொல்ல, கணேஷன் சிரித்து விட்டு அவரும் கல்யாணம் பண்ணி வச்சா தான் வெளியே போகலாம் என சொல்ல ஐயரும் அதிர்ச்சி அடைகிறார்.

மேலும், உன்ன கல்யாணம் பண்ண முடியாது என சொல்ல, கணேசன் அவருக்கு கன்னத்தில் அறைந்து, ஆடை மாற்றி வருமாறு அனுப்புகிறார்.


மறுப்பக்கம் காரின் உண்மையான ஓனர் அட்ரஸ் கிடைக்க, அங்கு விசாரிக்கவும் அவர்கள் இன்னொருவருக்கு விற்றதாக சொல்ல, மீண்டும் அங்கிருந்து அமிர்தாவை தேடி செல்கிறார்கள்.

இன்னொரு பக்கம், அமிர்தாவை ரெடி ஆகுமாறு கணேஷ் சொல்லிக் கொண்டு இருக்க, இறுதியாக வேறு வழியின்றி அமிர்தா கல்யாண கோலத்தில் வெளியே வருகிறார். அவரை பார்த்து ரொம்ப அழகா இருக்க என சொல்லிக் கொண்டு இருக்கிறார் கணேஷ்.

இதை தொடர்ந்து அவர்கள் வெளியே வர, அமிர்தாவுக்கு தாலி கட்ட செல்ல, அங்கு எழில் கட்டிய தாலியை கழட்டுமாறு கணேஷ் சண்டை போடுகிறார்.

அந்த நேரத்தில் சரியாக எழில், செழியன், பாக்கியா மூவரும் வருகிறார்கள். கணேஷ் அதிர்ச்சியாகி நிற்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement