• Mar 25 2026

ஃபேக் ரிவியூஸ் நீங்க ரெடியா? தரமான செய்கைக்கு ரெடியாகும் பூர்ணிமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் வைக்கப்பட்ட பணப்பெட்டியை 16 லட்சங்களுடன் எடுத்துக் கொண்டு வெளியேறியவர் தான் பூர்ணிமா ரவி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே இவர் சினிமாத் துறை மீது கொண்ட ஆர்வத்தினால் சிறிய வீடியோக்கள், போட்டோ சூட் என ஆரம்பித்து நாளடைவில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது காமெடி வீடியோக்களை வெளியிட்டு மிகவும் பிரபலமானார்.

இதை தொடர்ந்து அண்மையில் நயன்தாராவுடன் இணைத்து நடித்த அன்னப்பூரணி படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.


இந்த நிலையில், தற்போது தனது புதிய படைப்பொன்று விரைவில் வெளிவர போவதாக இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு சொல்லி உள்ளார் பூர்ணிமா.

அதாவது, அவர் பாட்டு பாட ரெடியானது போல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை பார்த்த பூர்ணிமா பிரியர்கள் அவருக்கு வாழ்த்துக்களை அள்ளிக் குவித்து வருகிறார்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

இதேவேளை, பூர்ணிமாவின் இந்த புதிய முயற்சியை ஃபேக் ரிவியூஸ் தகர்த்து விடுவார்கள் என்றும், ஆனால் உண்மையான திறமைக்கு வெற்றி நிச்சயம் என்றும் அவரின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement