• Jan 19 2025

ப்ரைம் டைம் சீரியல்களை பின்னுக்கு தள்ளிய மதிய நேர சீரியல்.. கலக்கிய 3 பெண்கள்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான மதிய நேர சீரியல் ஒன்று ப்ரைம் டைம் சீரியலின் டிஆர்பிஐ பின்னுக்கு தள்ளி விட்டதாக கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று ’பிரியமான தோழி’. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான இந்த சீரியல் கடந்த ஐந்தாம் தேதி முடிவடைந்தது என்பதும் நிறைவு நாளில் இந்த சீரியல் சீரியலை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

கடைசி வாரம் இந்த தொடருக்கு கிடைத்த டிஆர்பி, ப்ரைம் டைம் சீரியல்கள் சிலவற்றின்  ரேட்டிங்கை மிஞ்சி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முழு காரணம் இந்த தொடரில் இந்த தொடரின் கதை எழுதிய பர்வீன் பானு, திரைக்கதை எழுதிய தீபா மற்றும் வசனம் எழுதிய தமயந்தி ஆகிய மூன்று பெண்கள் சேர்ந்து உருவாக்கிய இந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தற்போது அதிக வரவேற்புடன் முடிவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



பிரைம் டைம் சீரியல்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் அமைந்திருப்பதை அடுத்து இந்த மூன்று பெண்களும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் விரைவில் இன்னொரு சீரியலில் இவர்கள் மூவரும் இணைந்து பணிபுரிய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இவர்கள் இணையும் அடுத்த சீரியலை ப்ரைம் டைமில் ஒளிபரப்ப சேனல் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்கிரோஷன், சாண்ட்ராபாபு, கௌஷிக், தீபக் ராஜேந்திரன், ஆகியோர்களுக்கு மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த சீரியல் தான் ’பிரியமான தோழி’ சீரியல் என்பதும், இந்த சீரியலில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, சுந்தரம் என்ற முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement