• Jan 19 2025

மாமியார் வீட்டுக்கு பதுங்கி பதுங்கி சென்ற பிரேம்ஜி..! தரமான சம்பவத்தை பகிர்ந்த இந்து

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக காணப்பட்டவர் தான் நடிகர் பிரேம்ஜி. இவர் 45 வயது வரை திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே காணப்பட்டார். தனது நண்பர்களுடன் பார்ட்டி, ஆட்டம், பாட்டம் என மிகவும் ஜாலியாக இருந்து வந்தார். அதன் பின்பு இவருக்கு திடீரென திருமணம் நடைபெற்றது. இது பல  ரசிகர்களை வாய் அடைக்க வைத்துள்ளது.

இரு வீட்டார்களின் சம்பந்தத்துடன் நடைபெற்ற பிரேம்ஜியின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களுமே கலந்து கொண்டார்கள். ஆனால் அதன் பின்பு இடம்பெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைமைகள் வரை அழைக்கப்பட்டு பிரம்மாண்டமாக சிறப்பித்து இருந்தார்கள்.

இதைத்தொடர்ந்து பிரேம்ஜி மனைவிக்காக சமைப்பது, வீடு கூட்டுவது, துணி துவைப்பது என அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டார். இது தொடர்பான வீடியோக்களை பிரேம்ஜியின் மனைவி இந்து தனது இன்ஸ்டா  பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.


இதை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டாரே என பல கருத்துக்களை பகிர்ந்து வந்தார்கள். ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது மனைவியுடன் ஜாலி பண்ணி வருகின்றார் பிரேம்ஜி.

இந்த நிலையில் தற்போது பிரேம்ஜி முதன்முதலாக தனது மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா  பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்து. தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement