• Sep 17 2024

ஒன்னுல இரண்டு லேடி சூப்பர் ஸ்டார்ஸை மடக்கிய விக்கி.. ரொம்ப ஜாலியா இருக்காப்ல..

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் விக்னேஷ் சிவன். இவர் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். அந்த படம் இவருக்கு பெரிதளவில் வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா நடிக்கும் போதே அவரை காதலிக்கவும் ஆரம்பித்தார்.

இதை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படத்தையும் இயக்கினார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்க நாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, கீர்த்தி செட்டி ஆகியோர் நடிக்கின்றார்கள்.

இன்னொரு பக்கம் தனது குடும்ப வாழ்க்கையிலும் சிறப்பாக பயணித்து வருகின்றார் விக்னேஷ் சிவன். அதன்படி நயன்தாரா மற்றும் உயிர் உலக்குடன் அடிக்கடி வெளியே செல்லும் காட்சிகளையும் இணையத்தில் வெளியிட்டு தமது சந்தோஷத்தை ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகின்றார்.


இந்த நிலையில், தற்போது மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மஞ்சு வாரியருடன் புகைப்படம் எடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

அதன்படி ஒரு பக்கம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா மறுபக்கம் மஞ்சு வாரியர் என இருவருக்கும் நடுவில் குஷியாக இருந்து புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதே வேலை, மஞ்சு வாரியருக்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து சொல்லியே இந்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement