• Jan 19 2025

டிடிக்கு மீண்டும் அறுவை சிகிச்சையா? இணையத்தில் தீயாய் பரவும் போஸ்ட்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இந்திய தமிழ் தொலைக்காட்சிகளில் டிவி சேனல் மூலமாகவே பல பிரபலங்கள் அதிக வரவேற்பை பெற்று முன்னணியில் காணப்படுகின்றார்கள். அதிலும் விஜய் டிவி பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையினும் ஜொலித்து வருகின்றார்கள்.

விஜய் டிவி தொலைக்காட்சியை பொருத்தவரை அதில் இருந்து திறமையான நபர்கள் தமிழ் சினிமாவிலும் பெரிய இடத்தை பெற்றுள்ளார்கள். மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறுவதற்கு விஜய் டிவி சிறந்த பிளாட்பார்மாக காணப்படுகின்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்  பெரும்பான்மையானவை ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் திவ்யதர்ஷினி. இவர் ரசிகர்களால் செல்லமாக டிடி என அழைக்கப்படுவார்.

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் இவர் தயங்காமல் அவர்களை பேட்டி எடுக்க கூடிய வல்லமை கொண்டவர். அவருடைய திறமையை பார்த்து அவருக்கு தனிப்பட்ட ரீதியாகவே  காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியை இவருக்கு ஏற்பாடு செய்தது.


இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் திவ்யதர்ஷினி. பவர் பாண்டி,  காபி வித் காதல் போன்ற படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ஆனாலும் சமீபத்தில் இடம்பெற்ற ஒரு விபத்து காரணமாய் அவர் அனைத்திலும் இருந்து விலகி காணப்பட்டார்.

இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ள திவ்யதர்ஷினி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழங்காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்ததாகவும் தற்போது மட்டும் மொத்தமாக நான்கு 6 அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவருடைய பதிவையும் புகைப்படங்களையும் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு இதில் இருந்து மீண்டு வந்ததற்காக தமது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement