• Jan 18 2025

மலையாளத்தில் சக்கைபோடு போட்ட'பிரேமலு'படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் பெரிதளவில் மக்கள் மத்தியில் எடுபடாத நிலையில், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என வேற்று மொழிகளில் வெளியான திரைப்படங்கள் ரவுண்டு கட்டி வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 

அந்த வகையில், மலையாளத்தில் வெளியான மஞ்சுமேல் பாய்ஸ்  படத்தை தொடர்ந்து, உருவான கலக்கல் கலந்த காதல் படம் தான் பிரேமலு.

இந்த படத்தில் நஸ்லன், மமிதா பைஜு நடித்துள்ளதோடு, இந்த படத்தை தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏரி இயக்கியுள்ளார்.

பிரேமலு திரைப்படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக கடந்த ஒன்பதாம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு நெருக்கமான கதைகளத்தில் உருவான இந்த படம், 100 கோடிக்கும் அதிகமாக வசூலில் வேட்டையாடி உள்ளது.


இந்த படம் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழிலும் கடந்த 15ம் திகதி வெளியானது.  


இந்த நிலையில், மலையாளத்தில் பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்ற 'பிரேமலு' திரைப்படம் தமிழிலும் வெளியானதை தொடர்ந்து, இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த மாதம் 12ஆம் தேதி டிஸ்னி ப்ளாஸ்ட் ஹாட்ஸ்டாரில் பிரேமலு திரைப்படம் வெளியாக உள்ளதாம். இந்த தகவல் ஓடிடி இல் படம் பார்க்க ஆர்வம் காட்டும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும்.

Advertisement

Advertisement