ஹாலிவுட்டில் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் தான் அட்லீ. இவர் சின்னத்திரை நடிகையான ப்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீண்ட வருடங்கள் கழித்து தான் அண்மையின் குழந்தையும் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கி வந்த அட்லீ, ஹாலிவுட் பக்கம் சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலில் சாதனை செய்திருந்தது.
இதன் காரணமாகவே பாலிவுட் முன்னணி நடிகர்கள் பலரும் அட்லீயுடன் படம் பண்ண வேண்டும் என்று வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜவான் பட வெற்றிக்கு பின்னர் அட்லீ தனது சம்பளத்தை 60 கோடியாக உயர்த்தி விட்டார். அது மட்டும் இன்றி படத்தின் வசூலில் இருந்து தனக்கு குறிப்பிட்ட ஷேர் கொடுக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது புஷ்பா புகழ் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கி வரும் படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இந்த காம்போவில் இணைந்துள்ளார். சன் பிக்சர்ஸ் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இதற்கான அதிகார்வ பூர்வ அறிவிப்பு இம்மாதம் 8ம் திகதி வெளியாகும் என கூறப்பட்டது.
இவ்வாறான நிலையில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக நேற்றைய தினம் தகவல் வெளியானது. ஆனால் இன்றைய தினம் அவருக்கு ஜோடியாக சமந்தாவுடன் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நாளைக்கு யாரை அட்லி கொண்டு வந்து நிறுத்த போறாரோ எனவும், அல்லு அர்ஜுனுக்கு திரிஷா, சமந்தா ஆசை காட்டி அட்லீ அவரை ஏமாற்றி வருவதாகவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றார்கள்.
Listen News!