• Jan 18 2025

'குக் வித் கோமாளி 5' பார்த்தா Stress எல்லாம் பறந்துடுமா? அடேங்கப்பா..!! பில்டப் கொடுத்த ஹீரோ

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனில் ஷெஃப்  வெங்கடேஷ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் மற்றும் ஷெஃப் மாதம்பட்டி ரங்கராஜும், ஷெஃப் தாமுவும் களமிறங்கி உள்ளார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடர்பில் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியானது. அதில்  முதலாவது ப்ரோமோ வீடியோவில், மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும்  தாமுவும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வந்து தம்மை நடுவர் என அவர்களே அறிவித்தார்கள்.

இரண்டாவது ப்ரோமோவில் கோமாளிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அத்துடன் அதில் மணிமேகலை பார்த்து ரசிகர்களுக்கும் ஒரே சந்தோஷமாக இருந்தது. ஆனால் பாலாவை காணவில்லை என சற்று குழப்பமும் பண்ணி இருந்தார்கள்.


இந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 தொடர்பில் மற்றும் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் நடிகர் அஸ்வின் சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி உலக அளவில் ரொம்ப ரீச் ஆகி இருக்குது. எனக்கும் பர்சனலா ரொம்பவே ஹெல்ப் பண்ணி இருக்குது. முக்கியமா இதுல ப்ளே பண்ண போறது நம்ம கோமாளிஸ் தான். உங்க எல்லாருக்கும் பாக்குறதுக்கு FUN ஆக இருக்கும் ஆனா அவங்களுக்கு FIRE ஆக  இருக்கும். ஏன்னா அந்த அளவுக்கு ஸ்ட்ரெஸ் கொடுப்பாங்க. இந்த சீசன் எப்படி இருக்குது என்று நானும் உங்களுடன் சேர்ந்து எதிர்பார்க்கிறேன் என அஸ்வின் கூறியுள்ளார்.


அதேவேளை, இந்த சீசனில் பங்குபெற்றும் போட்டியாளர்களாக யூடியூபர் இர்ஃபான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த், நடிகை திவ்யா துரைசாமி, பிரியங்கா, நடிகர் வசந்த், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது.

இவர்களைத் தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்களான விஷ்ணு விஜய், பாண்டியன் ஸ்டோர் ஹேமா, சுனிதா, புகழ், குரேஷி, மோனிஷா மற்றும் விஜய் டிவி ராமர், நடிகர் கூல் சுரேஷ், தெய்வமகள் சீரியல் நடிகை ஆன ஷபி என்பவரும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது.


இம்முறை பிக் பாஸ் 7 போட்டியாளர்களை இந்த நிகழ்ச்சியில் இறக்கிய நிலையில், அதில் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஒரு குக்காக இருப்பார் என கூறப்பட்டது. ஜோவிகா நன்றாக சமைப்பார் என்று சிலர் கூறினாலும், அச்சோ அவர் வேணாம் என சிலர் தவிர்த்து வருகிறார்கள்.

மேலும் வெங்கடேஷ் பட்  இல்லாத குக் வித் கோமாளி நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன சிலரும் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement