• Jun 16 2024

பிரபாஸின் புஜ்ஜி க்ளிம்ப்ஸை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்! இப்படி மொக்க வாங்கிடுச்சே..!!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமலஹாசன், அமிர்தாபச்சன், பிரபாஸ், திசா பதாணி, தீபிகா படுகோன் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிய படம் தான் கல்கி ஏடி 28 98 திரைப்படம். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் புஜ்ஜி காரில் பிரபாஸ் அசத்தல் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை பிரமிக்க வைத்திருந்தார்.

இந்த பிரபாஸ் பைரவா கேரக்டரில் நடித்துள்ளார். இதன் டீசரை ஹாலிவுட் நடிகர் நானி உள்ளிட்ட பிரபலங்கள் நேற்றைய தினம் வெளியிட்டு இருந்தார்கள். மேலும் புஜ்ஜி காருக்கான வாய்ஸ்ஸை கீர்த்தி சுரேஷ் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வெளியான புஜ்ஜி  க்ளிம்ப்ஸை டோலிவுட் ரசிகர்கள் முதல் பாலிவுட் ரசிகர் வரை கலாய்த்து தள்ளி உள்ளார்கள். அதாவது ஹாலிவுட் படங்களான ஸ்டார் வார்ஸ் மற்றும் டூன் உள்ளிட்ட படங்களின் சாயலாக இது இருப்பதாக நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருகின்றார்கள்.


எதிர்காலத்தில் நடக்கும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளதோடு இந்த படத்தின் மேக்கிங் பார்த்து ரசிகர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ஸ்டார்  வார்ஸ் படம் நினைவுக்கு வருகின்றதாம். மேலும் இதில் புஜ்ஜி பைரவாவின் கான்வர்சேஷன் செம காமெடியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த படம் நிச்சயமாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, புஜ்ஜி கார் சாலையில் மட்டும் பயணிக்கும் காராக இல்லாமல் ஆகாயத்திலும் பறக்கும் காராக உருவாக்கப்பட்டுள்ளதால் வேற்றுக்கிரகத்தில் நடக்கும் கதையாக இது இருக்குமா? அல்லது உலகமே வேற்று கிரகம் போல் 28 98 ஏடியில் மாறி விடுவதால் அங்கே நிலவும் கதையாக இருக்குமா? என ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement