• Jun 16 2024

சர்ச்சைகளுக்கு பின் பெயர் மாற்றத்துடன் வெளிவர இருக்கும் வடக்கன் திரைப்படம்,புதிய பெயர் என்ன தெரியுமா ?

Nithushan / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல திரைக்கதை ஆசிரியரும் வசனகர்த்தவுமான பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் படம் வடக்கன். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் படத்திற்கான  ரீசர் வெளியாகி திரைத்துறையினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


இத்  திரைப்படமானது  இந்த மாதம் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரங்களில் இந்த படம் சென்சார் பெறுவதற்காக தணிக்கை அதிகாரிகளிடம் திரையிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என சென்சார் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் வடக்கன் படத்தின் தலைப்பு படக்குழுவினர் 'ரயில்' என மாற்றபட்டுள்ளதுடன்  தணிக்கை சான்றிதழும் பெறப்பட்டுள்ளது.மேலும் படத்தின் வெளியீடு தாமதமான போதும் உத்தியோகப்பூர்வ வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்திருக்கிறது.

Advertisement

Advertisement