• Jan 19 2025

ஈஸ்வரியை தரதரவென இழுத்துச் சென்ற போலீஸ்.. பார்த்து ரசித்த கமலா! கோபிக்கு விழுந்த அடி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், தனக்கு தெரிந்தவர்களிடம் ஈஸ்வரியை மீட்பதற்கான வழியை பாக்கியா கேட்டுக் கொண்டிருக்க, எல்லோருமே அவர் முதலில் ஸ்டேஷனுக்கு போகட்டும் என்று தான் சொல்கின்றார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பாக்கியா பதறிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் கமலாவும் ராதிகாவும் ரோட்டில் நின்று பாக்கியா வீட்டுக்கு போலீஸ் வந்ததா என்று பார்த்துக் கொண்டிருக்க, அங்கு கோபி வந்ததும் ராதிகா உள்ளே சென்று விடுகிறார். அதன் பின்பு கமலா அடிக்கடி வந்து வாசலிலேயே எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்கின்றார்.

இன்னொரு பக்கம் எழிலும் செழியனும் போலீஸ் உடன் தமது பாட்டியை விடுமாறு போனில் கெஞ்சிக் கொண்டிருக்க, கமலா வந்து வாசலில் நின்று பார்ப்பதை பார்த்து செழியன் கோபப்படுகிறார். அந்த நேரத்தில் போலீஸ் ஜீப் வருகின்றது.

உள்ளே வந்த போலீசார் ஈஸ்வரி எங்கே என கேட்க, எல்லோரும் ஈஸ்வரி தப்பு பண்ணவில்லை என சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். ராமமூர்த்தி புரியாமல் என்ன நடந்தது என கேட்டுக் கொண்டிருக்க, இறுதியில் ஈஸ்வரியும் வந்து விடுகிறார். 


பாக்கியா வீட்டில் உள்ள எல்லோரும் ஈஸ்வரியை விடுமாறு கெஞ்சவும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பேசுமாறு ஈஸ்வரியை தரதரவென இழுத்து கொண்டு செல்கின்றார்கள். இதனை கமலாவும் ராதிகாவும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இறுதியில் ஈஸ்வரியை போலீசார் வண்டியில் ஏற்றிச்செல்ல, ராமமூர்த்தி போலீஸ் ஜீப் பக்கத்திலேயே ஓடிச் சென்று அழுது கொண்டிருக்கின்றார். அதன் பின்பு ராமமூர்த்தியை சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, அங்கு வந்த கோபி என்ன நடந்தது என விசாரிக்கின்றார். 

பார்த்த ராமமூர்த்தி கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் சரமாரியாக கோபியை அடிக்கின்றார். இறுதியில் இனியா உங்க வீட்ல இருந்து தான் போலீஸ் கம்பிளைன்ட்  கொடுத்திருக்காங்க என்று சொல்ல, கோபி அதிர்ச்சியாக நிற்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement