ஜெயம் ரவி நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவருடைய அடுத்த படத்தின் பிசினஸ் மிகப்பெரிய அளவில் ஆகி உள்ளதை அடுத்து கோலிவுட் திரை உலகினர் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆர்த்தியை பிரிந்த சோகம் இருக்கும் நிலையில் அவருடைய படத்தின் மிகப்பெரிய வியாபாரம் அவருக்கு ஆறுதலாக இருக்கும் என கருதப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் உருவான 'பூமி’ ’அகிலன்’ ’இறைவன்’ ‘சைரன்’ ஆகிய நான்கு படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்கள் நல்ல வெற்றி பெற்றாலும் அதில் ஜெயம் ரவியின் பங்கு குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’பிரதர்’, புவனேஸ் அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெனி’ மற்றும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் ’காதலிக்க நேரமில்லை’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு வெளியாக வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பிரதர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் இரண்டுக்கும் சேர்த்து 37 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது,.
ஜெயம் ரவியின் ’பிரதர்’ திரைப்படம் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகி இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த சில மாதங்களாக சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் வியாபாரம் மோசமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் ‘பிரதர்’ படத்தின் வியாபாரம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!