• Jan 19 2025

ரஜினி படத்தில் ஸ்ருதிஹாசன்.. கமல் படத்தில் அக்சராஹாசன்.. மாஸ் தகவல்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த '’இந்தியன் 2' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவரது நடிப்பில் உருவான 'கல்கி 2898 ஏடி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ’தக்ஃலைப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் இதனை அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கான பணிகள் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாக ’தக்ஃலைப்’ படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதால் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படம் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து கமல்ஹாசனின் 247 வது திரைப்படத்தை ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்குவார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பையும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் என்றும் கூறப்படுகிறது.



முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் கொண்ட இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கமல்ஹாசன் உடன்  அக்சராஹாசன் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்து உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’கூலி’ திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படத்தில் அக்சராஹாசன் நடிப்பதும் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement