• Mar 15 2025

தந்திரமா கேம் விளையாடுறாங்க! கேம் பற்றிய புரிதல் இல்லை! நாமினேஷனில் சிக்கிய நபர்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி வாரங்களை நோக்கி நகர்கிறது. இந்நிலையில் இன்றைய நாள் முதல் ப்ரோமோ ரிலீஸாகியுள்ளது. அதில் என்ன இருக்கிறது என பார்ப்போம்.


பிக்பாஸ் லிவ்விங் ஏரியாவில் போட்டியாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது பிக்பாஸ்  "இந்த வீட்டில் இருந்து வெளியேற்ற சரியான காரணங்களுடன் 2 நபர்களை தெரிவு செஞ்சி சொல்லுங்க" என்று சொல்கிறார். ஜாக்குலின் "விமர்சனங்கள் வைத்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாரு அதுனால நாமினேட் பண்ணுறேன்" என விஷாலை சொல்கிறார். அடுத்து முத்து, ராயன் ஆகியோர் "கேம் பற்றிய புரிதல் அவருக்கு இல்லை" என்று ராணவை நாமினேட் செய்கிறார்கள்.


மேலும் "நாம யாரை வச்சி விளையாடலாம் என்று மெயின் பண்ணி விளையாடுறாங்க, பிரன்ஸ் ஏதும் சொல்லிட்டா வெளிய நாங்க தப்பா தெரிஞ்சிருவோம் என்று சேப் கேம் விளையாடுறமாதிரி இருக்கு " என்று விஷால் மற்றும் சவுந்தர்யா- ஜாக்லினை நாமினேட் செய்கிறார்கள். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது. யார்யார் நாமினேட் லிஸ்ட்டில் வரப்போகிறார்கள் என்று அடுத்த ப்ரோமோவில் பார்ப்போம்.       



Advertisement

Advertisement