பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி ராதிகாவை பார்ப்பதற்காக வீட்டுக்கு செல்கிறார். அங்கு ராதிகா தனியாக இருப்பதை பார்த்து எதற்காக அவசரப்பட்டு வீட்டை காலி பண்ணுறா? பேசி முடிவெடுத்து இருக்கலாம் தானே என்று மிகவும் உருக்கமாக பேசுகின்றார்.
இன்னொரு பக்கம் கோபியை ராதிகா வீட்டுக்கு அனுப்பி வைத்ததற்காக பாக்கியாவை பார்த்து முறைத்துக் கொண்டு உள்ளார் ஈஸ்வரி. வாசலை எட்டிப் பார்த்தபடி இருக்க, இனியா தான் போய் பார்த்து விட்டு வருகிறேன் என்று கிளம்புகின்றார். ஆனால் பாக்கியா போக வேண்டாம் என அவருக்கு திட்டுகின்றார்.
இதைத்தொடர்ந்து ஈஸ்வரி அவன் என் கூட இருப்பான் என்று சத்தியம் பண்ணி இருக்கான். அப்படியே உன் கூட சேர்ந்து வாழ சொன்னன், அதற்கு அவன் எதுவும் சொல்லவில்லை.. அவனுடைய மனதில் உன்னுடன் வாழ்வதற்கான விருப்பம் உள்ளது என்று சொல்லுகின்றார்.
இதை கேட்ட பாக்கியா கோபத்தின் உச்சியில் நீங்க தப்பு கணக்கு போடாதீங்க.. உங்கள அம்மா ஸ்தானத்தில் இருந்து வைத்து பார்க்கின்றேன்.. அந்த மரியாதையை கெடுக்க வேண்டாம்... அவரோட சேர்ந்து வாழ்வதற்கு எனக்கு கொஞ்சம் கூட எண்ணமில்லை என்று சரமாரியாக ஈஸ்வரிக்கு பதிலடி கொடுக்கின்றார்.
இறுதியாக ராதிகாவிடம் வீட்டை காலி பண்ண வேண்டாம் என்று கோபி கெஞ்சுகிறார். ஆனாலும் அவர் தனது முடிவில் உறுதியாக இருக்கின்றார். மேலும் பாக்கியா சொல்லித்தான் தான் வந்ததாக கோபி சொல்லுகின்றார். இதை கேட்டு ராதிகாவுக்கு இன்னும் கோபம் அதிகரிக்கின்றது. அத்துடன் நானும் மையூவும் இங்கு சந்தோஷமாகவே இல்லை என்று சொல்ல, கோபி அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!