• Jan 18 2025

அமைதி புயலின் அரசியல் வருகை அற்புதமே... ஒரு ரசிகனாக மனம் வேதனை அடைகிறது... தனது ஸ்டைலில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் பார்த்திபன்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் அவர்களின் அரசியல் வருகை ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் அதிரடியான இன்பத்தை தந்தாலும் ரசிகர்கள் பலருக்கு அவர் இனி படத்தில் நடிக்க மாட்டார் என்னும் செய்தி பெரும் சோகத்தையே தந்துள்ளது. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்போது நடிகர் பார்த்திபன் அவர்களும் தனது பாணியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


நண்பர்களுக்கு வணக்கம் அரசியல் களத்தில் புதிதாக புரட்ச்சி குரல் கொடுத்திருக்கும் நண்பர் விஜய் அவர்களுக்கு வாழ்த்து கூறும் செய்தி இது தரமான விபரமான கழகம். தமிழக வெற்றி கழகம் துடங்கிய நடிகர் விஜய் அவர்களின் கட்சிக்கு பின்புலமாய் உள்ள அர்ப்பணிப்பு ஆச்சரியப்படுத்துகிறது.


100 கோடிக்கு மேல் சம்பளம் பெரும் விஜய் 100 கோடி மக்களுக்கு சேவை செய்ய தனது திரை துறையை அர்ப்பணித்து முழு நேரம் அரசியல்வாதியாக இறங்குவது பாராட்டவேண்டிய விடயம். சினிமா அரசியல் என்று பாதி பாதி இல்லாமல் முழு நேர அரசியல் வாதியாக வந்தது மகிழ்ச்சியை தருகிறது. 


ஆனால் சிறந்த சினிமா மகுடத்தை துறந்து துறவி போல அரசியலுக்கு வருவது சற்று சங்கடத்தை தந்துள்ளது. ஒரு ரசிகனாக விஜய் விரும்பியாக எனக்கும் கவலை தருகிறது. இப்படி கட்டாயம் செய்ய வேண்டுமா என பல கேள்விகள் எழுகிறது. அவர் மீது உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

நடிக்க வந்த போதே அடிக்க வந்த 1000 விமர்சனங்களை வெட்டி வீசி தமிழகத்தில் வெற்றி கண்டவர். அதிர்ந்து பேசா அமைதியே உருவான விஜய் இனி ஓட்டுக்காக ஒவ்வொரு இடத்திலும் பேசவேண்டும். இதனை விஜய் எப்படி சமாளிக்க போகிறார். அமைதியான கடலே ஆழி பேரலையை உருவாக்கும் அப்டி எல்லாம் யோசித்து விட்டு தான் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என வாய்ஸ் ஆடியோவில் வாழ்த்து தெரிவித்தார் நடிகர் பார்த்திபன்.

Advertisement

Advertisement