• Jan 19 2025

உருகி உருகி காதல்.. அதன்பின் ஊடல்.. மணிகண்டனின் ‘லவ்வர்’ டிரைலர்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

மணிகண்டன் நடித்த ’குட்நைட்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படம் ’லவ்வர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து பிப்ரவரி 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மிகைப்படுத்தப்படாத மிகவும் இயல்பான காதலர்கள், அவர்களிடையே நடக்கும் காதல் மற்றும் ஊடல், சின்னச்சின்ன சண்டைகள், பிரேக் அப் மற்றும் மீண்டும் ஒன்றிணைதல் போன்ற காட்சிகள் இயக்குனர் பிரபு வியாஸ் அவர்களால் மிகவும் அருமையாக இயக்கப்பட்டுள்ளது என்பது இந்த ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது. 

ஏற்கனவே தமிழில் ஏராளமான காதல் படங்கள் வெளிவந்திருந்தாலும் இந்த படம் அவைகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும் என்றும் குறிப்பாக மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியாவின் காதல் ஜோடி பொருத்தமாக இருப்பதாகவும் ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 



மொத்தத்தில் ஒவ்வொரு ஒவ்வொரு நிஜ காதலர்களின் அனுபவங்கள் இந்த படத்தை பார்க்கும் ஏற்படும் என்பதால் நிச்சயம் காதலர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மணிகண்டன் ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.


Advertisement

Advertisement