விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 9 தற்பொழுது புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார ஏவிக்சனில், கனியும், திவாகரும் வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன

இந்நிலையில், தற்பொழுது வெளியான ப்ரோமோவில் திவாகர் வெளியேறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் நிகழ்ச்சியின் காட்சியில், திவாகர் வெளியேறியதை தாங்க முடியாத VJ பார்வதி கண்ணீருடன், “நீங்க இல்லாமல் நான் என்ன செய்யப்போறேனோ..? சண்டை போடுறெண்டாலும் இனி யாரோட சண்டை பிடிக்கப் போறேனோ..?” என்று உணர்ச்சிமிக்க குரலில் கூறியுள்ளார்.இதைக் கேட்ட திவாகர்," நீ ரொம்ப bold-ஆ விளையாடு” என்று கூறியுள்ளார்.

இந்த அழுகையுடன் கூடிய காட்சி, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலர் பார்வதியின் உணர்ச்சிபூர்வ நடத்தை குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
பின் நடுவர் விஜய் சேதுபதி திவாகரிடம் “உங்களுக்கு என்கிட்ட ஏதாவது சொல்லுறதுக்கு இருக்குதா?” என்று கேட்டார். அதற்கு திவாகர் காமெடியுடன் “எனக்கு விஜய் சேதுபதி கிஸ் பண்ணா.. என்ர ஆசை நிறைவேறும்” எனக் கூறியுள்ளார்.
Listen News!