சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், க்ரிஷை மனோஜ் அழைத்து வருகின்றார். ஆனால் ரவுடிகள் தப்பித்து விடுகின்றனர். எனினும் வீட்டுக்கு வந்ததும் மனோஜின் நம்பர் எப்படி ரவுடிகளுக்கு கிடைத்தது என்று எல்லோரும் சந்தேகப்படுகின்றார்கள். இதனை விசாரிக்குமாறு அண்ணாமலை முத்துவுக்கு சொல்லுகின்றார்.
இன்னொரு பக்கம் சீதா வீட்டுக்கு சத்யா செல்கின்றார். அந்த நேரத்தில் சத்யா கிட்நாப்பிங் கேசில் ரவுடிகளை பிடித்ததற்காக போலீஸ் டிபார்ட்மெண்டில் இருந்து பாராட்டு கிடைத்ததோடு அவருக்கு பிரமோஷன் கிடைக்கின்றது .
இந்த விஷயத்தை சத்யா மீனாவுக்குச் சொல்ல, அவர் முத்துவுக்கு சொல்லுகின்றார். ஆனாலும் அந்த ரவுடிகளை விரட்டி பிடித்தது நான் தான் என்ற விஷயத்தை சொல்லவில்லை.

இதைத்தொடர்ந்து பார்வதி வீட்டுக்குச் சென்ற விஜயா, அங்கு சிந்தாமணியுடன் சேர்ந்து விஜயாவை தவறாக பேசுகின்றார். இதனால் பார்வதி கண்கலங்குகின்றார். அந்த நேரத்தில் மீனாவும் அங்கு வருகின்றார்.
என்ன நடந்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கும் போது, பார்வதியின் மகன் வெளியூரில் இருந்து வருகின்றார். இதன்போது கோபமாக வந்த அவர் பார்வதியை திட்டியதோடு அவருடைய நண்பரையும் திட்டுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!