• Jan 18 2025

'ஆறு மாதம் ஒன்றாக வாழ சொன்னான்' அட்ஜெஸ்மெண்ட் தொடர்பில் ஓபனாக பேசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமானவர் தான் லாவண்யா. தற்போது அவர் வழங்கிய பேட்டி ஒன்றில் அட்ஜெஸ்மெண்ட் குறித்து ஓபனாக சொல்லியுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான்  லாவண்யா. சமீபத்தில் இந்த தொடர் நிறைவும் பெற்றது.

இவ்வாறான நிலையில், தன்னுடைய  மாடலிங்கில் பிஸியாக இருக்கும் லாவண்யா கொடுத்த ஒரு பேட்டியில் தன்னுடைய கேரியரில் அட்ஜெஸ்மெண்ட்  கேட்டு  சீண்டிய இயக்குனர்கள் தொடர்பில் சொன்ன விஷயங்கள் வைரலாகி இருக்கிறது.


அதன்படி அவர் கூறுகையில், 'எனக்கு ரொம்பவே தெரிந்த ஒரு காஸ்டிங் இயக்குனர். ஒருமுறை என்னை காண்டெக்ட்டில் இருக்க சொன்னார். ஆனால் மற்றவர்கள் நினைப்பது போல சும்மா பேசும் காண்டெக்டாக இல்லை. அவனுடன் 6 மாதம் ஒன்றாக வாழ சொன்னான். அதுக்கு மேல் வேண்டாம் என்றான். அப்படி இருந்தால் நீ வேற லெவலுக்கு போய்டுவ. அது மட்டும் இல்லாமல் மீடியாவில் 3 நாள் பொண்ணுங்க பேரை சொன்னான். அவர்கள் ஒண்ணுமே இல்லாமல் இருந்தார்கள். இப்ப பாரு வீடு, கார் என செட்டில் ஆகிவிட்டனர் என்றான். நீயும் அப்படி இருக்கலாம் என அவன் சொன்னபோது நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். ஏன்னா நான் அப்போது தான் வளர்ந்து வந்தேன். நான் அவனை முறைத்து என் பெயரை கெடுத்து கொள்ள விரும்பவில்லை. அதனால் அவனை எதிர்த்து பேசாமல் அமைதியாக நகர்ந்து விட்டேன்' என்றார்.

Advertisement

Advertisement